Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கேரளா காங்கிரஸ் புதிய தலைவர் நியமனம்.. ராகுல் காந்தி வாழ்த்து

கேரளா காங்கிரஸ் புதிய தலைவர் நியமனம்.. ராகுல் காந்தி வாழ்த்து

கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் குறித்த பல வாரங்களாக நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று கட்சி, மாநிலத் தலைமையில் பெரிய மாற்றங்களைச் செய்தது. அதன்படி கே. சுதாகரனுக்குப் பதிலாக கண்ணூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், பேராவூர் எம்எல்ஏவுமான சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மாற்றம் வந்துள்ளது. அவருக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் கேரளத்தின் நீதி மற்றும் மாநில முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். காங்கிரஸ் கட்சிக்கும் கேரள மக்களுக்கும் பலத்தின் தூண்களாகவும் சேவை மனப்பான்மையும் கொண்ட ஒரு அச்சமற்ற போர்வீரன் கே.சுதாகரன்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments