சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சீன ஜனாதிபதி கடந்த 7 ஆண்டுகளின் பின், வடகொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னைச் சந்திக்கவுள்ளார்.
இந்த பயணத்திற்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் குறிப்பிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுடன் சுமூகமற்ற நிலை நீடிக்கின்ற சந்தர்ப்பத்தில், தங்களின் பாரம்பரியக் கூட்டணியை முழுமையாக மீட்டெடுக்க இரு நாடுகளும் முயற்சித்து வருவதால், இந்தச் சந்திப்பு இருதரப்பு உறவுகளிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.


