Friday, October 23, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் போலி பணத்தாள் கொடுத்து இளைஞரிடம் பெரும் மோசடி

கனடாவில் போலி பணத்தாள் கொடுத்து இளைஞரிடம் பெரும் மோசடி

கனடாவின் டொராண்டோ நகரில் முகநூல் சந்தை தளம் வாயிலாகத் தனது கைபேசியை விற்பனை செய்த நபர் ஒருவர், 1,900 டாலர் மதிப்பிலான போலி பணத்தாள்களைப் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பு கருதி தனது முழு அடையாளத்தை மறைத்து ஜே என்ற பெயரில் பேசிய அந்த நபர், தாம் சாம்சங் இசட் போல்ட் 8 கைபேசியை விற்பனைக்காகப் பதிவேற்றியதாகவும், அதனை வாங்க வந்த நபர் பத்தொன்பது 100 டாலர் தாள்களைத் தந்துவிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அந்த அனைத்து ரூபாய் தாள்களும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்ததும், தொடுவதற்கு இயல்புக்கு மாறாக இருந்ததும் தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வாங்குபவரின் சமூக வலைதளப் பக்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் தனது கணக்கை முற்றிலுமாக நீக்கியிருந்தது உறுதியானது. இந்த போலி பணத்தாள்களை காவல்துறை வசம் ஒப்படைக்க உள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

இது குறித்து டொராண்டோ காவல் துறையின் நிதி குற்றப் பிரிவு துப்பறியும் அதிகாரி டேவிட் காபி தெரிவிக்கையில், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இணைய வழி தனிநபர் விற்பனைகளில் இதுவரை 210 மோசடி வழக்குகள் பதிவாகி, 1,75,000 டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக 2025-ஆம் ஆண்டை விட போலி பணத்தாள் குற்றங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 50 மற்றும் 100 டாலர் தாள்களே அதிகம் போலியாகப் புழக்கத்தில் விடப்படுவதாகவும், பரிவர்த்தனைகளின் போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments