Tuesday, October 13, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் சூதாட்ட விடுதி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

கனடாவில் சூதாட்ட விடுதி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

கனடாவின் மிள்டன் பகுதியில் வாகனம் மற்றும் சூதாட்ட விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி மிள்டனில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை உடைத்து, குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணம், கடிகாரம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை இருவர் திருடிச் சென்றதாக ஹால்டன் பிராந்திய காவல் துறை தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 3, அதே நபர்கள் ‘எலிமெண்ட்ஸ் காசினோ’ பகுதிக்குச் சென்று, அங்கிருந்த சேவைப் பிரிவின் பணப் பெட்டியிலிருந்து பணத்தைத் திருடியுள்ளனர்.

பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்த தீவிர விசாரணையைத் தொடர்ந்து, நார்த் யார்க் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது சம்மந்தப்பட்ட இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ‘க்ளாக் 17’ கைத்துப்பாக்கி (3 குண்டுகள் நிரப்பப்பட்ட மேகசின்களுடன்), ‘நோரின்கோ’ ரக ரைபிள் துப்பாக்கி (2 குண்டுகள் நிரப்பப்பட்ட மேகசின்களுடன்) மற்றும் ஒரு ஸ்பிரிங் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வாகனத்தில் திருடப்பட்ட பொருட்களும் மீட்டெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் நார்த் யார்க்கைச் சேர்ந்த இராக்லி ஷாரியா மற்றும் டேவிட் குக்கிலாவா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருத்தல், குற்றச் செயல்கள் மூலம் ஆயுதம் பெறுதல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments