Tuesday, October 13, 2026
spot_img
Homeகனடா செய்திகள்நெதர்லாந்து பயணித்த விமானம் கனடாவில் அவசர தரையிறக்கம்

நெதர்லாந்து பயணித்த விமானம் கனடாவில் அவசர தரையிறக்கம்

நெதர்லாந்து நோக்கிப் பயணம் செய்த கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திங்கள்கிழமை அதிகாலை கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘UA 946’ என்ற விமானமே, எஞ்சின் கோளாறு காரணமாக ‘செயின்ட் ஜான்ஸ் சர்வதேச விமான நிலையத்தில்’ தரையிறக்கப்பட்டது.

போயிங் 767 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 122 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் வழக்கம்போல எவ்வித அசம்பாவிதமும் இன்றி கீழே இறங்கியதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இரவில் தங்குவதற்காகத் தங்கும் விடுதி வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஆம்ஸ்டர்டாம் அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் யுனைடெட் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க செயின்ட் ஜான்ஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளும், உள்ளூர் அவசரகால மீட்புக் குழுவினரும் உடனடியாகக் கிடைக்கப்பெறவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments