Saturday, November 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் மகிந்த ராஜபக்சவை உருவக்கேலிச் செய்த மேடைநாடகம்!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் மகிந்த ராஜபக்சவை உருவக்கேலிச் செய்த மேடைநாடகம்!

மாவீரர் தினத்தையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வொன்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கேலி செய்யும் வகையிலான மேடை நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளமை பெரும் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது.

இது செயற்கை நுண்ணறிவில் செய்ததாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.ஆனால் சிலர் அதை உறுத்திப்படுத்தியுள்ளனர்.

நேற்று (27.11.2026) நடைபெற்ற மாவீரர் நினைவேந்தலில் அரகேற்றப்பட்ட இந்த நாடகத்தின் காணொளிப் பகுதிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (27.11.2026) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களிலும்இ தமிழ்நாடு – வெளிநாடுகளிலும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினம்இ போரினால் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக நடத்தப்படுவதுடன், சுமார் மூன்று தசாப்த காலமாக நீடித்த உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments