Saturday, November 28, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்றப்பட்டது!

திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்றப்பட்டது!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது.

கோயில் ஸ்தானிக பட்டர்களும், உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பி. பார்த்திபன் ஆகியோரும் சூடத்தை ஏற்றி பூஜை செய்து பிறகு தீபத்தை ஏற்றினர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில், சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

மலையடிவாரத்தில் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள், தீபத்தைப் பார்த்து பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். சங்கொலி, கைலாய வாத்தியங்கள் ஓயாமல் ஒலித்தன. ஆங்காங்கே வாண வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்கின.

முன்னதாக, ​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழுவினர் மாலை 4.30 மணியளவில் தூண் இருக்கும் பகுதிக்கு வந்தனர்.

ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு, முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக தூணைச் சுற்றிலும் மரங்களால் சாரம் கட்டப்பட்டு, அதன் மேல் நின்று விளக்கேற்றுவதற்கு ஏதுவாகப் பலகைகள் அடிக்கப்பட்டு தீப மேடை தயார் செய்யப்பட்டது.

மேலும், தீபம் ஏற்றுவதற்கு 30 கிலோ நெய், திரி தயாரிப்பதற்கான 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண்பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீபம் ஏற்றும்போது தொல்லியல் துறை அதிகாரி அறவாழி தலைமையிலான குழுவினரும், கோயிலின் நான்கு ஸ்தானிக பட்டர்களும் மலை உச்சியில் இருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments