Saturday, November 28, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜோர்ஜ் ஹேமன் காலமானார்!

கனடாவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜோர்ஜ் ஹேமன் காலமானார்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும், நீண்டகால தொழிற்சங்கத் தலைவருமான ஜோர்ஜ் ஹேமன் தனது 77ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நியூ டெமோகிரடிக் கட்சியின் இடைக்காலத் தலைவரான ஜெனிபர் வைட்சைட், ஜோர்ஜ் ஹேமனைத் தனது நண்பர், சக ஊழியர் மற்றும் சமூக நீதிக்காகப் போராடிய தலைவராக நினைவுகூர்ந்துள்ளார்.

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 முதல் 2024 வரை பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றிய ஜோர்ஜ் ஹேமன், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் CleanBC திட்டத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றினார்.

மேலும், 1999ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைகள் பிரிட்டிஷ் கொலம்பியா அரச ஊழியர் சங்கத்தின் (BCGEU) தலைவராகப் பணியாற்றிய அவர், தொழிலாளர்களின் உரிமைகள், பொதுச் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.

2013ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த அவர், வான்கூவர்–ஃபேர்வியூ தொகுதியிலிருந்து மாகாண சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து 2017 மற்றும் 2020ஆம் ஆண்டுகளிலும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

அவரது மறைவுக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. குடும்பத்தினருடன் அன்பான சூழலில், அமைதியாக உயிரிழந்ததாக அவரது துணைவி ரெபெக்கா சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான அவரது அர்ப்பணிப்பை மதிப்பதாக மாகாண முதல்வர் லோர்ன் டோர்க்சனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments