Saturday, November 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இந்திய பிரதமர் -அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

இந்திய பிரதமர் -அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA)) 25ஆவது அமைச்சர்கள் மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடில்லி சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்சந்திப்பு நடந்துள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத், இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக (26) ஆம் திகதி புதுடில்லிக்கு பயணமாகிறார்.

ஐழுசுயு முக்கூட்டமைப்பின் உறுப்பினராகவும், முன்னாள் தலைவராகவும் (2023–2025) உள்ள இலங்கை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments