Saturday, November 28, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக்கில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணப் பனிச்சறுக்குப் போட்டிகள் இரத்து!

கியூபெக்கில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணப் பனிச்சறுக்குப் போட்டிகள் இரத்து!

கியூபெக் மாகாணத்தில் இவ்வாண்டு நடைபெறவிருந்த உலகக் கிண்ணப் பனிச்சறுக்குப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்போட்டிகளுக்குப் பதிலாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள இடங்களைத் தெரிவு செய்வதற்குச் சர்வதேச பனிச்சறுக்கு மற்றும் பனிச்சறுக்குப் பலகை சம்மேளனம் ஆராய்ந்து வருகின்றது.

இந்தப் போட்டிகள் வட அமெரிக்காவிலுள்ள வேறொரு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது எனச் சர்வதேச சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் கியூபெக் மாகாணத்தின் மொன்ட்-ட்ரெம்ப்ளான்ட் பகுதியில் நடைபெறவிருந்த பெண்களுக்கான ‘ஜெயன்ட் ஸ்லாலோம்’ (Giant slalom) பனிச்சறுக்குப் போட்டிகள், சாதகமற்ற காலநிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்டன.

முன்னதாக 2024 ஆம் ஆண்டிலும் இதே காரணத்திற்காக கியூபெக் மாகாணத்தில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணப் போட்டி இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பனிச்சறுக்கு மற்றும் பனிச்சறுக்குப் பலகை சம்மேளனத்தின் போட்டி அட்டவணையில், கியூபெக் மாகாணத்தின் மொன்ட்-ட்ரெம்ப்ளான்ட் தொடர்ந்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments