Sunday, September 13, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுடன் இன்று களமிறங்கும் ருமேஷ் தரங்க!

உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுடன் இன்று களமிறங்கும் ருமேஷ் தரங்க!

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள Ultimate Championship போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க பதிரகே இன்று (13) களமிறங்க உள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள ருமேஷ் தரங்க, இந்த ஆண்டு 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து உலகின் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

மேலும், இம்முறை டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தையும் ருமேஷ் தரங்க வென்றுள்ளார்.

அவருக்கு கடுமையான சவாலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படும் ஜெர்மனியின் ஜூலியன் வெபர், ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதனுடன், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோர்ன் வால்காட் உள்ளிட்ட உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களும் இன்றைய போட்டியில் பங்கேற்கின்றனர்.

உலக தரவரிசையில் முன்னணியில் இருப்பதுடன், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டைமண்ட் லீக் போன்ற முக்கிய போட்டிகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் இந்தப் போட்டித் தொடர் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இன்றுடன் போட்டிகள் நிறைவடைகின்றன.

உலகின் தலைசிறந்த வீரர்களில் சிறந்தவரைத் தேர்வு செய்யும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் முதலிடம் பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

அத்துடன், இரண்டாம் இடம் முதல் எட்டாம் இடம் வரை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் எட்டாம் இடம் பெறுபவருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments