Friday, October 2, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய பெண்கள் வில்வித்தையில் வரலாற்றுத் தங்கம்!

இந்திய பெண்கள் வில்வித்தையில் வரலாற்றுத் தங்கம்!

ஜப்பானின் ஐச்சி – நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான Recurve Team வில்வித்தை பிரிவில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அங்கிதா பகத், கீர்த்தி சர்மா, கும்கும் மொஹோட் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் வலுவான தென் கொரிய அணியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

இந்த வெற்றியின் மூலம், ஆசிய விளையாட்டில் பெண்கள் Recurve Team பிரிவில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது.

மேலும், இந்தப் பிரிவில் தென் கொரியா தொடர்ந்து பல ஆண்டுகளாக வைத்திருந்த ஆதிக்கத்திற்கும் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இளம் வீராங்கனைகளான கீர்த்தி சர்மா மற்றும் கும்கும் மொஹோட்டுடன் அங்கிதா பகத்தின் அனுபவமும் இணைந்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments