அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.
கேடலினா தீவிலிருந்து பிரதான நிலப்பரப்பில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்வதற்காக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினா், கடலில் தத்தளித்த 4 பேரை மீட்டனா். அவா்களில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மீட்கப்பட்ட மற்ற இருவா் சீரான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மாயமான ஐந்தாவது நபரைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினா், தீயணைப்பு வீரா்கள் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையின் நீச்சல் வீரா்கள் இரவு முழுவதும் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.


