Thursday, October 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அஸ்வெசும திட்டம் இரத்தாகிறதா? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும திட்டம் இரத்தாகிறதா? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என நிதி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நலன்புரி திட்டங்களின் பயன்கள் உரிய தரப்பினருக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே பயனாளர்கள் தெரிவு செய்யும் நடைமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் உண்மையான நிதி நிலைமை மற்றும் பொருளாதாரத் தரவுகள் எதுவும் மறைக்கப்படவில்லை எனவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

குறுகிய அரசியல் இலாபங்களை நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பி மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அனில் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும், மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நலன்புரி உதவிகள் வழங்கப்படுவதில்லை என்றும், முறையான தரப்படுத்தலின் அடிப்படையிலேயே பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நலன்புரி உதவிகள் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments