Tuesday, September 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சல் – தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைப்பு

மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சல் – தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைப்பு

தி.மு.க. தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று (15) நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தொடங்கப்பட்ட நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் பெரியாரின் பிறந்தநாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments