Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்!

மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்!

தமிழ் சினிமாவில் 90, 20 ஆரம்ப காலகட்டத்தில் ‛ஆக்சன் கிங்’ ஆக வலம் வந்தவர் அர்ஜூன். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில வருடங்களாக அர்ஜுன் கதாநாயகனாக நடிக்காமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் மீண்டும் புதிதாக உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‛விருமாண்டி’ அபிராமி நடிக்கவுள்ளார். இவர்களுக்கு மகள் கதாபாத்திரத்தில் ‛ஸ்டார்’ படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments