Sunday, September 6, 2026
spot_img
HomeUncategorizedபீஜிங்கில் சர்வதேச ஊடக மாநாடு; 90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

பீஜிங்கில் சர்வதேச ஊடக மாநாடு; 90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்டம் சீனாவின் பீஜிங் நகரில் நேற்று (4) ஆரம்பமானது.

இம்முறை நிகழ்ச்சித்திட்டத்தில் உலகளாவிய ரீதியில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் 3 மாதங்கள் வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இதன்போது பயிற்சி பட்டறைகள், சிறப்பு விவாதங்கள், நேர்காணல்கள் மற்றும் சீன கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இணைவதற்கும் அவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தெற்கு உலகளாவிய நாடுகளின் ஊடக நிறுவனங்களுக்கு இடையே நடைமுறை ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான தளத்தை அமைத்துக்கொடுத்தல் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சீனா பற்றிய பரந்த மற்றும் ஆழமான புரிதலை வழங்குதல் என்பன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2014ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் இதுவரை உலகின் 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments