Friday, September 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பரவும் எபோலா வைரஸ்!

பரவும் எபோலா வைரஸ்!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) எபோலா வைரஸ் தாக்குதல் கட்டுக்கடங்காத வகையில் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட மையங்களில் மருத்துவப் பணியாளர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்றிலேயே மிக வேக பரவல் கொண்ட எபோலா அலையை எதிர்கொண்டு வரும் காங்கோவில், இதுவரை 7,773 பேருக்குக் தொற்று உறுதி செய்யப்பட்டு, 3,759 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வடக்கு கிவுவில் (North Kivu) கடந்த மூன்று வாரங்களில் மட்டும் எபோலா பாதிப்பு 73 சதவீதம் வரை பெருமளவில் அதிகரித்துள்ளது.

நாட்டின் 7 மாகாணங்களுக்குப் பரவியுள்ள இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகச் சுகாதார அமைப்பு திணறி வருகிறது.

காங்கோ அரசு புதிய எபோலா சிகிச்சை மையங்களை உருவாக்கி வரும் போதிலும், அவற்றை இயக்குவதற்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என உலகச் சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி ஆன் ஆன்சியா தெரிவித்துள்ளார்.

சராசரியாக 50 படுக்கைகள் கொண்ட ஒரு சிகிச்சை மையத்தை முழுமையாக இயக்க சுமார் 300 சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், கடுமையான ஆள் பற்றாக்குறை மருத்துவச் சேவையை முடக்கியுள்ளது.

சம்பளக் பாக்கி காரணமாகச் சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிகரிக்கும் உயிரிழப்புகள் நிலமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

2014-2016 ஆப்பிரிக்க எபோலா பேரிடரை விடவும் கொடூரமான இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நிதியுதவி மற்றும் கூடுதல் சர்வதேச மருத்துவக் குழுக்கள் அங்கு சென்றால் மட்டுமே முடியும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments