Friday, September 25, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சிங்கப்பூர் பொதுப் பேருந்துகளில் அபராதம் விதிக்கும் புதிய விதிமுறைகள்

சிங்கப்பூர் பொதுப் பேருந்துகளில் அபராதம் விதிக்கும் புதிய விதிமுறைகள்

சிங்கப்பூர் பொதுப் பேருந்துகளில் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு 500 சிங்கப்பூர் டொலர் வரை அபராதம் விதிக்கும் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது .

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் இனிமையான பயணச் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம்  தெரிவித்துள்ளது.

பேருந்து இருக்கைகள் மீது கால்களை வைப்பதற்கு, ஹெட்போன் இன்றி உரத்த குரலில்/சத்தமாக ஆடியோ அல்லது பாடல்களை ஒளிபரப்புவது மற்றும் பேருந்திற்குள் உண்பது, குடிப்பது அல்லது குப்பை போடுவது போன்ற செயற்பாடுகளிற்கு 500 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் அல்லது முனையங்களை வேண்டுமென்றே அசுத்தப்படுத்துவது மற்றும் பயணிகள் அல்லது பேருந்து நிலையப் பணியாளர்களுக்கு ஆபத்து அல்லது வழிமறிப்பு ஏற்படுத்துவது 5,000 சிங்கப்பூர் டொலர்  வரை அபராதம் விதிக்கப்படும்

அதேசமயம் இனிவரும் காலங்களில் சிங்கப்பூர் பொதுப் பேருந்துகளில் பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் இந்த விதிகளைப் பின்பற்றி கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments