நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
அதேபோல், நடிகர் கார்த்தியின் சர்தார் – 2 திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கைதி – 2 திரைப்படத்தில் இணையவுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்திலும் கார்த்தி இயக்குநர் சைலேஜ் கொலனு இயக்கத்தில் ஹிட் – 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி சகோதர நடிகர்கள் இருவரும் தெலுங்கு இயக்குநர்கள் படத்தில் ஒரே நேரத்தில் இணைந்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


