Saturday, October 3, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சர்தார் - 2 திரைப்படம் ஓடிடி வெளியீடு

சர்தார் – 2 திரைப்படம் ஓடிடி வெளியீடு

நடிகர் கார்த்தியின் சர்தார் – 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் – 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் எண்டர்டெயின்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநர் பி.எஸ். மித்ரனுடன் இணைந்து நம்பி திரைக்கதை எழுதியுள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த மாதம் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்ற இப்படம், ரூ. 25 கோடி மட்டுமே வசூல் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சர்தார் – 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments