Sunday, November 22, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காலை உணவுக்குப் பின் 36 மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

காலை உணவுக்குப் பின் 36 மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

நுவரேலியா – மஸ்கெலியா சென். ஜோசப் தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் 36 மாணவர்கள் திடீர் சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (20) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின் கீழ்ப்பிரிவில் தரம் 4இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வகுப்பறைகளில் 96 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், காலை உணவை உட்கொண்ட பின்னர் வகுப்பறையில் இருந்தபோது சுமார் 36 மாணவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 31 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், எஞ்சிய 5 மாணவர்கள் (இரண்டு ஆண் மாணவர்கள் மற்றும் மூன்று பெண் மாணவர்கள்) தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டதா அல்லது நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண வாயுச் சூழல் காரணமாக ஏற்பட்டதா என்பது தொடர்பில் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments