Friday, September 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கறுப்பு நிற ஆடையில் பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி

கறுப்பு நிற ஆடையில் பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் நீதித்துறை அமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தச் சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும் (25).

இதற்கமைய, இன்று மாலை குறித்த சட்டமூலங்களுக்கான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

இச்சட்ட மூலங்கள் தொடர்பான பாராளுமன்ற விவாதம் நேற்று (24) ஆரம்பமானது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவினால் இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவாதம் தொடங்கியது.

மேலும், இச்சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஐக்கிய மக்கள் சக்தியினரால் “ஜனநாயகத்தை அழிக்கும் 22 வேண்டாம்” என்ற கருப்பொருளின் கீழ் பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

அங்கு கறுப்புப் பட்டி அணிந்து போராட்டக்காரர்கள் பொல்துவ சந்தியில் திரண்டதுடன், இப்போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உட்பட பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments