Monday, November 23, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தோனேசிய மிட்டாய் தொழிற்சாலை தீ - 3 பேர் உயிரிழப்பு

இந்தோனேசிய மிட்டாய் தொழிற்சாலை தீ – 3 பேர் உயிரிழப்பு

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிற்கு மேற்கே அமைந்துள்ள மிட்டாய் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

செராங் மாவட்டத்தில் அமைந்துள்ள Fonusa Agung Mulia தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மிட்டாய் மற்றும் சர்க்கரை சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ விபத்தைத் தொடர்ந்து நான்கு பேர் அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மீட்புப் படை அதிகாரி ரிஸ்கி ட்வியான்டோ தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையின் சில பகுதிகள் தீயில் எரிந்துள்ளதுடன், கூரையின் பகுதிகளும் இடிந்து விழுந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையும் சில பகுதிகளில் தீ தொடர்ந்து எரிந்ததால், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments