இலங்கை கிரிக்கெட் அணியினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை ஆடவர் அணி அங்கு பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்துடன் 3 போட்டிகள்கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இலங்கை விளையாடவுள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை வீரர்களைத் தயார்படுத்துவதற்கும் சரியான வீரர்களைத் தெரிவு செய்வதற்கும் இங்கிலாந்துடனான சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் அமையும் என நம்பப்படுகிறது.
சௌத்ஹம்ப்டனில் செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியுடன் தொடர் ஆரம்பாகும்.
போட்டி விபரங்கள்
சர்வதேச ரி20 தொடர்
செப்: 15: முதலாவத போட்டி – சௌத்ஹம்ப்டன்
செப்: 17: இரண்டாவத போட்டி – கார்டிவ்
செப் 19: மூன்றாவது போட்டி – இடம் அறிவிக்கப்படவுள்ளது
சர்வதேச ஒருநாள் தொடர்
செப் 22: முதலாவது போட்டி – டேர்பன்
செப் 24: இரண்டாவது போட்டி – லீட்ஸ்
செப் 27: மூன்றாவது போட்டி – லண்டன்


