Friday, October 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனோஜன் விடுதலை விவகாரம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

அனோஜன் விடுதலை விவகாரம் – மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த மகஜர், இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க அக்கமகா பண்டித மகுலேவே விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின்மகாநாயக்க கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி மகா நாயக்க தேரர் ஆகியோரினால் அனுப்பப்பட்டுள்ளது.

தென்னிலங்கை பிரதான சங்கநாயக்க கலாநிதி ஓமல்பே சோபித தேரரினால் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இதுதவிர, இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்து குருமார் சங்கத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான கலாநிதி சிவாஸ்ரீ கே.வி.கே.வைதீஸ்வர குருக்களினாலும் அண்மையில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

பாகொட சந்தவங்சி தேரர், வேபடைர தம்மசிறி தேரர், இந்து குருமார் சங்கத்தின் உறுப்பினர் சிவாஸ்ரீ குகதாச குருக்கள் , சட்டத்தரணி தனுஜா நவரத்ன மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆர்.ஏ.அமில சஞ்சீவ உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments