2026 பிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு C பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில் மற்றும் ஹெய்ட்டிஅணிகள் மோதின.
இந்த போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் மத்தேயுஸ் குன்ஹா பிரேசிலின் முதல் கோலை அடித்தார்.
36 ஆவது நிமிடத்தில் மத்தேயுஸ் குன்ஹா தனது இரண்டாவது கோலை பதிவு செய்ததுடன் 45+3 ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் முதல் பாதியின் இறுதி தருணத்தில் பிரேசிலின் 3 ஆவது கோலை அடித்தார்.
அடிக்கப்பட்ட 3 கோல்களும் முதல் பாதியிலேயே பெறப்பட்டவை ஆகும்.
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி குழு ஊ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் ஹெய்ட்டி அணி கால்பந்து தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் முதல் அணியாக மாறியுள்ளது.


