Saturday, June 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பாகங்களில் இன்று (20) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி,  மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பெய்யக்கூடும்.

மேலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பிருந்தாலும், சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடும்.

அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments