2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (19) வெளியாகியுள்ள நிலையில் குறித்த பெறுபேறுகளை http://www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும்.
அதேநேரம், பரீட்சை பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஜூலை 8ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தள முகவரியூடாகச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


