Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்"ஹவுஸ் மேட்ஸ்" படத்திற்கு இயக்குனர் வினோத் பாராட்டு

“ஹவுஸ் மேட்ஸ்” படத்திற்கு இயக்குனர் வினோத் பாராட்டு

கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜவேல் எழுதி , இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். கதாநாயகன் வீடு வாங்குகிறார் அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இது ஒரு காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் ஹவுஸ் மேட்ஸ் படத்தை பார்த்த இயக்குநர் எச்.வினோத் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments