Monday, November 2, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள ‘கிங்’ படம், டிசம்பர் 24 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கிங்’ படத்தின் முதல் பாடலான ‘து மில் ஜாயே’ பாடலை வெளியிட்டுள்ளனர்.

சச்சின் – ஜிகர் இசையில் அர்ஜித் சிங், எட் ஷெரின் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடல் காட்சிகளில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் காதலும் இரசனையாக எடுக்கப்பட்டுள்ளது.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இப்படம் ரூ. 350 கோடியில் உருவாகிவருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments