இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், பால சரவணன், ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
மீனவ சமூகத்தின் வாழ்க்கைச் சூழலை பின்னணியாகக் கொண்டு, படகுப் போட்டியை மையப்படுத்தியதாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ். இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.65 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்ந்தும் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதால், ‘மண்டாடி’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


