Tuesday, September 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெப்பமான வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெப்பமான வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெப்பமான வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை மாலை 4:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பகல் வேளையில், மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு (heat index) எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலையை எட்டக்கூடும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments