Wednesday, September 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விமானத்தில் இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்

விமானத்தில் இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்

இலங்கையைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவருக்கு விமானத்தில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவின்போது முதலுதவி சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றிய பெரியகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூர்த்தியை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாராட்டி கௌரவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த 78 வயதான மருத்துவர் மூர்த்தி, கடந்த 19ஆம் திகதி தனது மகனைச் சந்திப்பதற்காக அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

கொழும்பில் இருந்து சிட்னி நோக்கிப் பயணித்த விமானத்தில், அவருடன் பயணித்த 74 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரைப் பரிசோதித்த மருத்துவர் மூர்த்தி, அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பெண்ணைக் கண்காணித்த நிலையில், அவர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.

மருத்துவர் மூர்த்தியின் உடனடி நடவடிக்கை மற்றும் சிகிச்சையால் சக பயணி காப்பாற்றப்பட்டதற்கு விமானத்தில் இருந்த பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர் மூர்த்தியின் சேவையைப் பாராட்டும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments