Sunday, June 7, 2026
spot_img
HomeUncategorizedஜெர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதியது

ஜெர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதியது

விமானத்தின் முன்சக்கரத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு திடீரென உள்வாங்கியதால், விமானத்தின் முன்பகுதி தரையில் மோதியது. 

ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான பிராங்க்பர்ட் விமான நிலையத்தில்  நேற்று பிற்பகல் மணியளவில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான ட்ரீம்லைனர் விமானம் இயக்கப்பட இருந்தது.

பயணிகள் அந்த விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் முன்சக்கரத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு திடீரென உள்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் விமானத்தின் முன்பகுதி பயங்கர சத்தத்துடன் தரையில் மோதியது.

200-க்கும் மேற்பட்டவர்கள் அமர கூடிய வகையான இந்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லாததால் பெரும் அசாம்பவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் விமானிகள், ஊழியர்கள் என 14 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments