Saturday, June 6, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியாவுக்கு பெருமை: பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை

இந்தியாவுக்கு பெருமை: பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை

2026 நோர்வே செஸ் தொடரை வென்று முதல் இந்தியராக சாதனை படைத்தார் 20 வயது பிரக்ஞானந்தா.

நோர்வே செஸ் 2026 தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக நம்பர் 1 மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தி, நடப்பு உலக சாம்பியன் குகேஷை 34 மூவ்களில் தோற்கடித்து, இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வென்று, இந்த மதிப்புமிக்க பட்டத்தை வென்ற முதல் இந்தியராக 20 வயதிலேயே வரலாறு படைத்துள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நோர்வேயில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 2 முறை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரட்டிய பிறகு, இறுதிப்போட்டியிலும் வென்று மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டி. குகேஷ், அலிரேசா ஃபிரூஜா, வெஸ்லி சோ மற்றும் கெய்மர் என பல சவால் கொடுக்கக்கூடிய சாம்பியன் வீரர்கள் இருந்தபோதிலும், இந்திய செஸ் விளையாட்டிற்கு புதிய கௌரவத்தை தேடிக்கொடுத்துள்ளார் பிரக்ஞானந்தா.

முதலில் அவருக்கு நோர்வே தொடர் நினைத்தபடி செல்லவில்லை, ஆனால் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை 2 முறை வீழ்த்தியபிறகு, நடப்பு உலக சாம்பியன் குகேஷை வெறும் 34 மூவ்களில் வீழ்த்தி தன்னுடைய மகுடத்தை தட்டிப்பறித்துள்ளார்.

தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தா, இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி பட்டத்தை உறுதிசெய்தார்.

மதிப்புமிக்க நோர்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியராக வரலாறு படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments