தமிழ்நாட்டில் இனிவரும் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகமே வெற்றிபெறும் என்றும், விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், முதல்வர் விஜய்யின் ஆட்சியை மக்கள் பாராட்டுவதாகவும், விஜய் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.
விஜய்யின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளமைக்கு இடைத்தேர்தல் வெற்றிகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், விஜய்யின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் கூறினார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதேபோன்று மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் அக்கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


