Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்விஜய் நடித்த சச்சின் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் நடித்த சச்சின் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியீடு செய்து வரும் டிரெண்ட் சமீப காலமாக நிலவி வருகிறது . ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுசின் ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு மக்கள் கொண்டாடி தீர்த்தனர். கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆன திரைப்படங்களுக்கு ஒரு பென்ச் மார்க்காக அமைந்தது. அதனை தொடர்ந்து விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு தற்பொழுது கொண்டு வந்துள்ளனர். ‘சச்சின்’ படம் வருகிற 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற் பாடல்களின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சச்சின்’ படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கம் செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments