பிரபல யூடியூபரும் நடிகருமான VJ சித்து கதாநாயகனாக நடித்துள்ள ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
வெல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இத்திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.
வெளியாகியுள்ள டீசர், நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘டயங்கரம்’ உருவாகியுள்ளதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, நண்பர்கள் குழுவை மையமாகக் கொண்ட கதைக்களமும், கலகலப்பான வசனங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இத்திரைப்படத்தில் VJ சித்துவுடன் இணைந்து நட்டி (நடராஜ்), நிதின் சத்யா, வாட்ஸ்அப் மணி, ஹர்ஷத் கான், இளவரசு, காளி வெங்கட் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும், இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்னரான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை உரிமத்தை வெல்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளதுடன், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவுப் பணிகளையும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். VJ சித்துவின் நண்பரான டூட் விக்கி படத்தின் படைப்பாக்க இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இணையத்தளத்தில் பிரபலமான VJ சித்து மற்றும் அவரது குழுவினர் தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ள நிலையில், ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது


