Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வனிதா விஜயகுமாரின் “மிஸ்ஸஸ் & மிஸ்டர்” டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து ‘தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதற்கிடையில், இவர் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமார் அவரே இயக்கி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அறிமுக டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் நடித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 25ம் தேதி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியாகிறது. ஜூன் மாதம் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments