தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான கவின், தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் மகன் மற்றும் மகள் என இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் கவின், தற்போது அவர்களின் பெயர்களை சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.
அதன்படி, தனது மகனுக்கு தியான் லியோ கவின் என்றும், மகளுக்கு தியோலினா கவின் என்றும் பெயரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கவின் இறுதியாக சதீஷ் இயக்கத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘மாஸ்க்’ மற்றும் ‘ஹாய்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


