Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு மறியல்!

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு மறியல்!

மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல் லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகைதரும் மாணவன் ஒருவர் ‘பட்டப் பெயர்’ கூறி அழைத்ததாகத் தெரிவித்து மாணவரை ஆசிரியர் வகுப்புவேளையில் அடித்துத் தாக்கியுள்ளார்.

இந்தநிலையில் மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது கைதுசெய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை எதிர்வரும் 14நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments