Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா?

ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா?

டில்லியில் ராஜ்யசபா எம்பியாக ஜூலை 25ல் பதவியேற்க உள்ளார் கமல்ஹாசன். முன்னதாக, இந்த தகவலை தனது அன்பு நண்பர் ரஜினிகாந்த்திடம் சொல்லி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியது, இருவருமே பாலசந்தரின் மாணவர்கள். பல நல்ல பழக்க வழக்கங்களை இவர்கள் குருநாதரிடம் இருந்து கற்று இருக்கிறார்கள். இந்த நட்பு, இந்த அன்பு, இந்த மரியாதையை எந்த இளம் ஹீரோவிடமும் பார்க்க முடியாது. இருவரின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக சண்டை போடுகிறார்கள். ஆனால், இவர்கள் பலமான நட்பில் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்தது. ரஜினியை வைத்து படம் தயாரிக்க முயற்சித்தார் கமல். ஏனோ அது நடக்கவில்லை. வருங்காலத்தில் நடக்குமா என தெரியவில்லை. இருவரும் இணைந்து நடிப்பார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஒருவர் படத்தில் மற்றவர் கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

ரஜினி அரசியலில் குதித்து ஜெயிக்க நினைத்தார், அது முடியவில்லை. கமல்ஹாசன் இப்போது எம்பி ஆகப் போகிறார். இது ரஜினிக்கு கிடைக்காத வாய்ப்பு. அதேசமயம், ரஜினி 4 பேரப் பிள்ளைகளுக்கு தாத்தா ஆகிவிட்டார். கமல் ஆகவில்லை. இது அவருக்கு கிடைக்காத விஷயம்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments