Monday, November 2, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்முரசு புயல் தீவிரம்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து

முரசு புயல் தீவிரம்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சென்னையில் 11 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முரசு புயலானது சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 180 கிலோமீற்றர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 160 கிலோமீற்றர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 22 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் புயல் நகர்ந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையில், ஓங்கோலுக்கு தெற்கே இன்று நள்ளிரவு முதல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், முரசு புயலின் தாக்கத்தினால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், புயல் காரணமாக சென்னையிலிருந்து புறப்படவிருந்த 5 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 6 விமானங்களும் என மொத்தம் 11 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ராஜமுந்திரி, விஜயவாடா, கடப்பா மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கான விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புயலின் நகர்வு மற்றும் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments