Monday, November 2, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

கனடாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

கனடாவில் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் கவலைக்கிடமான முறையில் அதிகரித்து வருவதாகக் கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரியின் சமீபத்திய அறிக்கை எச்சரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்) சிஃபிளிஸ் தொற்றின் விகிதம் 4 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதோடு, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்தத் தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

அறிக்கை தரவுகளின்படி, 2014 முதல் 2023 வரை தொற்று பரப்பும் சிஃபிளிஸ் பாதிப்பு 4 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, 2018 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளிடையே காணப்படும் பிறவிச் சிஃபிளிஸ் பாதிப்பு விகிதம் 3 மடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்தின்போதோ குழந்தைகளுக்கு இந்தத் தொற்று பரவக்கூடும்.இது குழந்தை இறந்து பிறத்தல் அல்லது பிறந்த சில நாட்களில் குழந்தை உயிரிழத்தல் போன்ற தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

“குழந்தைகள் இந்தத் தொற்றோடு பிறப்பது மிகவும் எச்சரிக்கையளிக்கும் ஒன்றாகும். கர்ப்பகால பரிசோதனைகளில் ஏதோ ஒன்று விடுபடுவதையே இது காட்டுகிறது என கனடாவின் யோர்க் பிராந்திய சுகாதார அதிகாரி டொக்டர் ஃபரீன் கராச்சிவாலா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments