வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்றாலும், அதற்காக பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நீண்ட நேரம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் வீதிகள், முதலமைச்சரின் தேர்தல் பிரசார பயணத்துக்காக பல மணி நேரம் முடக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை சந்திப்பதற்காக செல்லும் முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பிரசார நிகழ்வுகளுக்காக அரச நிர்வாகத்தின் முழு பொறிமுறையையும் பயன்படுத்தி பொதுமக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


