Wednesday, September 30, 2026
spot_img
Homeபொது செய்திகள்இந்தியாவில் ‘Apple Pay’ அறிமுகம்

இந்தியாவில் ‘Apple Pay’ அறிமுகம்

நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், ஆப்பிள் நிறுவனம் தனது ‘Apple Pay’ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தங்களது சாதனங்களைப் பயன்படுத்தி கடைகளிலும் இணையவழியிலும் பணம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வங்கியின் விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் வாலட்டில் இணைத்து ‘Contactless Tap & Pay’ முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

கடைகளில் பணம் செலுத்தும்போது ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்சை கட்டண இயந்திரத்தின் அருகில் கொண்டு சென்று ‘Tap’ செய்வதன் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

இதற்காக Face ID, Touch ID அல்லது சாதனத்தின் கடவுச்சொல் மூலம் பயனர் அடையாளம் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கார்டு விவரங்கள் நேரடியாக கடைகளிலோ அல்லது ஆப்பிள் சேமிப்பகத்திலோ சேமிக்கப்படாமல், குறியாக்கம் செய்யப்பட்ட சாதனக் கணக்கு எண் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments