Thursday, October 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மாஸ்கோவை குறிவைத்த 650 உக்ரைன் ட்ரோன்கள் முறியடிப்பு

மாஸ்கோவை குறிவைத்த 650 உக்ரைன் ட்ரோன்கள் முறியடிப்பு

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா தீபகற்பம் மற்றும் அஸோவ் கடற்பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ஏவிய சுமார் 900 ட்ரோன்களை ஒரே இரவில் இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி 650 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 105 ட்ரோன்கள் நகரை நெருங்குவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

மேலும், செவ்வாய்க்கிழமை பகலில் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட 68 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் 51 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைனில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கீவ் மற்றும் ஸபோரிஷியா நகரங்களில் டினிப்ரோ நதியின் மீது அமைந்துள்ள பாலங்களை ரஷ்யா குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments