Friday, September 25, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மதுராந்தகம் இடைத்தேர்தல் - த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரசாரம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் – த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரசாரம்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (25) பிற்பகல் 3 மணிக்கு ஆத்தூர் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் வீதி வழியாக பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், ஈசூர்-பூதூர், மதுராந்தகம் வழியாக ஆத்தூர் சுங்கச்சாவடியை வந்தடைந்து, அங்குள்ள பிரசாரக் கூட்டத்தில் விஜய் உரையாற்றவுள்ளார்.

பொலிஸின் அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைய பிரசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என த.வெ.க. பொதுச் செயலர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments