Tuesday, September 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயது சந்தேக நபர் கைது

போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயது சந்தேக நபர் கைது

16 போலி யூரோ நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான அந்த சந்தேக நபர், போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக ஹட்டன் நகருக்கு வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பை சேர்ந்த தனது மைத்துனர் இந்த வெளிநாட்டுப் நாணயத்தாள்களைத் தன்னிடம் கொடுத்ததாகவும், அவை போலி நாணயத்தாள் என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது, ​​சந்தேக நபரிடமிருந்து 9 போலி 200 யூரோ நாணயத்தாள்கள் மற்றும் 7 போலி 100 யூரோ நாணயத்தாள்கள் உட்பட 16 போலி வெளிநாட்டுப் நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments